‘தி லெஜெண்ட்’ படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகிறது!

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் பல புது முகங்கள் கதாநாயகனாக அறிமுகமாகி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல தொழிலதிபரும், சரவணா ஸ்டோர் உரிமையாளரான தி லெஜெண்ட் சரவணன் தமிழ் சினிமாவில் ‘தி லெஜெண்ட்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஜெ.டி மற்றும் ஜெர்ரி இயக்குகிறார். ஜெர்ரி விக்ரம் மற்றும் அஜித் நடிப்பில் வெளியான உல்லாசம் படத்தின் மூலம் பிரபலமானார்.

இந்த திரைப்படத்திற்கு வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் தி லெஜெண்ட் சரவணன் உடன் இணைந்து ரோபோ ஷங்கர், பிரபு, விஜய் குமார், நாசர், மையில் சாமி மற்றும் கோவை சரளா, யாஷிகா ஆந் நடித்து இருக்கிறார்கள்.

சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் போஸ்டர்கள் வெளியானது. இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் தகவல் வெளியானது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான ‘மோசலோ மோசலோ’ என்ற பாடல் நாளை வெளியாகிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…