விரைவில் தொலைக்காட்சியில் -‘வீரமே வாகை சூடும்’!

இயக்குனர் து பா சரவணன் இயக்கத்தில் விஷால் கதநாகனாக நடித்து, டிம்பில் ஹையாதி கதாநாயகியாக நடித்து திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இந்த திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து யோகி பாபு, மாரி முத்து, ரவீனா ரவி, அகிலன் புஷ்பராஜ், ராஜ செம்பலோ, இளங்கோ குமரவேல், துளசி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில்நடிகர் விஷாலே தயாரித்து இருந்தார். யுவன் ஷங்கர் ராஜ இசையமைத்து இருக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கதாநாயகனாக வரும் விஷால் போரஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியின் மகனாக இருக்கும் விஷால் போலீசில் சேர விரும்புகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக தன் தங்கை கொலை செய்யப்படுகிறார். தங்கையை கொன்றவரை விஷால் பழிவாங்குவதுதான் படத்தின் கதை.
இந்த திரைப்பட கடந்த பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில் இந்த திரைப்படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இதை தொடர்ந்து வருகிற 10ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு முதல் முதலாக தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பபடுகிறது.