ஏழுமலையான் கோவிலில் நடிகர் யாஷ் சாமி தரிசனம்!

கன்னட சினிமாவில் வெளியான கே.ஜி.எப் திரைப்படம் இந்திய சினிமாவையே கன்னட சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. 80 கோடி பட்ஜெட்டில் உருவான கே.ஜி.எப் திரைப்படம் 250 கோடி வசூல் படைத்து அபார சாதனை படைத்தது. தற்போது கே.ஜி.எப்-2 படம் ரீலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கே.ஜி.எப்-2 படத்தின் ட்ரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. கே.ஜி.எப்-2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவுனர் தென்னிந்திய முழுவதும் பயணித்து ரசிகர்களை சந்தித்து வருகிறார்கள்.

இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கிருக்கும் இந்த படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவருடன் இணைந்து ஸ்ரீநிதி, சஞ்சய், ரவீனா போன்ற பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்து இருக்கிறார். தற்போது திரைப்படம் ரிலீசாக இரு தினங்கள் இருக்கும் நிலையில் இன்று நடிகர் யாஷ் திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் பெற்றார். அவர் கோவிலில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….