AK#61 படப்பிடிப்பு துவங்கியதாக இணையத்தில் தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் வருபவர் நடிகர் அஜித் குமார். ரசிகர்களால் பிரியமாக தல என்று அழைக்கப்பட்டு பின்பு அவர் அறிவித்தபடி அனைவரும் அஜித்குமார் மற்றும் AK என்று அழைத்து வருகிறார்கள். தற்போது இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை.

எச்.வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் அஜித் குமாரின் அடுத்த படத்தை பற்றிய அப்டேட்டும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அஜித்61 படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார்.

இன்று AK#61 படத்தின் படப்பிடிப்பு பூஜை உடன் துவங்கி உள்ளதாக டுவிட்டரில் தகவல் பரவி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இரண்டு மாதங்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தி தீபாவளி பண்டிகை அன்று படத்தை திரையிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.