சிவகார்த்திகேயனின் ‘Bae’ பாடல் யூடியூபில் சாதனை!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன் பயணத்தை துவங்கி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘டாக்டர்’. நெல்சன் திலீப் குமார் இயக்கதில் வெளிவந்த இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவாதி இயக்கியுள்ள திரைப்படம் ‘டான்’. இந்த திரைப்படம் வருகிற மே மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்த எஸ்.ஜெ. சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், காலி வெங்கட், RJ விஜய் மற்றும் குக் வித் கோமாளி ஷிவாங்கி போன்ற பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இரண்டாவது சிங்கிள் பாடலான ‘Bae’ பாடல் யூடியூபில் இதுவரை 25மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ‘டான்’ படம் வெளியாவதர்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….