‘நானே வருவேன்’ கெட்டப்பில் தனுஷ்!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘மாறன்’. ஓ.டி.டி.யில் வெளியான மாறன் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. 11 ஆண்டுகள் கழித்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இணைத்து நடிக்கும் படம் ‘நானே வருவேன்’. இதற்க்கு முன்பு இவர்கள் கூட்டணியில் 3 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.
தனுஷ் இந்த திரைப்படத்தில் இரு வேடத்தில் நடித்து வருகிறார். வயதான மற்றும் இளமையான வேடம். இந்த திரைப்படத்தின் படடிப்பு பணிக்கள் விரைவாக நடைபெற்று வருகிறது. தனுஷுடன் இணைந்து இந்துஜா ரவிசந்திரன், சுவீடனை சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகிறார்கள். படத்தின் கதாநாயகி எல்லி அவ்ரம் தனது பகுதியை நடித்து முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தற்போது படப்பிடிப்பில் நடிகர் பிரபு கலந்து கொண்டுள்ளார் என்ற செய்தியும் பரவி உள்ளது. இவர் இதற்க்கு முன்பே தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் தனுஷுடன் நடித்து இருந்தார். தற்போது இணையத்தில் தனுஷ் மற்றும் படக்குழுவினர் இணைந்து எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.