நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் நடிகர் ஜெய்-யின் திரைப்படம்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெய். இவர் தற்போது சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கலகலப்புக்கு படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஜெய் உடன் இணைத்து நடிக்கிறார் ஜீவா.

இதை தொடர்ந்து இயக்குனர் கோபி நாராயணன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் ஜெய். மேலும் இவர் நடிப்பில் பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, பட்டாம் பூச்சி என வரிசையாக படங்கள் வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் சுசீந்திரம் நடிப்பில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘குற்றமே குற்றம்’.

D கம்பனி தயாரிப்பில், AXESS பிலிம் பேக்டரி வழங்கும் குற்றமே குற்றம் படத்தில் ஜெய் உடன் இணைந்து பாரதிராஜா, ஹரிஷ் உத்தமன், காலி வெங்கட், ஸ்மிறுதி வெங்கட், ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வேள்ராஜ் ஒலிப்பதீவு செய்து இருக்கிறார். அஜீஸ் இசையமைத்து இருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.