இளையராஜாவின் இசைக்கு மயங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

ரஜினியின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை வைத்து ‘3’ படத்தையும், கவுதம் கார்த்திக்கை வைத்து ‘வை ராஜா வை’ படத்தையும் இயக்கி இருந்தார். அதன் பிறகு பத்து ஆண்டுகள் எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். 18 வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். சமீபத்தில இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக தெரிவித்தார்கள்.

இதனால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கவனத்தை திரைப்படம் இயக்குவதில் செலுத்தி வருகிறார். இதையடுத்து அவர் பல மொழிகளில் இயக்கிய பயணி (முசாஃபிர்) என்ற ஆல்பம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளார். ‘ஓ சாத்தி சால்’ என்ற இந்தி படத்தை இயக்குகிறார்.

தற்போது ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் இசை ஞானி இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் இளையராஜா ஆர்மோனியத்தை வாசிப்பது போலவும் அதை ஐஸ்வர்யா ரசித்து கேட்பது போலவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…