கே.ஜி.எப்-2 படத்தால் பாலிவுட் திரைப்படத்தின் ரீலிஸ் தேதி மாற்றம்!

2019-ஆம் ஆண்டு நாணி நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் ‘ஜெர்சி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ஜெர்சி படத்தை இந்தியிலும் ரீமேக் செய்துள்ளனர். இந்தி மொழியிலும் தெலுங்கில் இயக்கிய கௌதம் தின்னணுரியாவே இயக்கி இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நாணி கதாபாத்திரத்தில் ஷாஹித் கபூர் நடித்து இருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து மிருணாள் தாக்கூர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்தியில் ‘ஜெர்சி’ திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாவதாக படக்குழு அறிவித்து இருந்தார்கள். ஆனால், தற்போது திடீரென்று ஜெர்சி பட ரீலீஸ் தேதியை மாற்றிவைத்துள்ளனர்.
காரணம் பாலிவுட்டில் கே.ஜி.எப்-2 படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கே.ஜி.எப்-2 படத்திற்க்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு காரணமாக ‘ஜெர்சி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் கே.ஜி.எப்-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.