சதிஷ் படத்திற்கு உலகநாயகன் கமலஹாசன் பட டைட்டில்!

தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகனாக களம் இறங்கி தற்போது கதாநாயகனாக நடிக்க துவங்கி இருக்கிறார் நடிகர் சதிஷ். இவர் நகைச்சுவை நடிகனாக எதிர்நீச்சல், கத்தி, ரெமோ போன்ற பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தொடர்ந்து ‘ஓ மை கோஸ்ட்’ படத்திலும் நடித்து இருக்கிறார்.
தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு ‘சட்டம் என் கையில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதே தலைப்பில் 1978-ல் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதே டைடிலை சதிஷ் படத்திற்கும் படக்குழுவினர் வைத்துள்ளனர்.
இயக்குனர் சாச்சி தயாரிக்கும் கிரைம் திரில்லர் படத்தில் சதீஷுடன் இணைந்து கன்னட நடிகை சம்படா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து விஜய் பிரதீப், மைம் கோபி, பாவெல் நவகீதம், பாவா செல்லதுரை, கஜராஜ், ராமதாஸ், மற்றும் குக் வித் கோமாளி தமிழ் ரித்விகா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.