ட்ரெண்டாகிறது அனிருத் மற்றும் சிம்புவின் ட்விட்டர் பதிவு!

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நிகழ்ச்சி ஒன்றில், இந்திய மக்கள் ஆங்கில மொழிக்கு பதிலாக மற்ற மாநில மக்களிடம் உரையாடும் பொது இணைப்பு மொழியாக இந்தி பேசவேண்டும் என்று கூறிய இருந்தார். அமைச்சர் அமிடிஷாவின் இந்த கூற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக தமிழர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்க்கு தமிழ் நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இசை புயல் எ.ஆர். ரஹ்மான் அமைச்சரின் இந்த பேச்சிற்க்கு பதில் கொடுக்கும் வகையில் ட்விட்டர் வலைத்தளத்தில் ‘தமிழ்தான் இணைப்பு மொழி’ என்று கூறியிருந்தார். மேலும் “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்” என்ற பாரதிதாசன் கவிதைகளையும் பதிவிட்டு இருந்தார்.

தற்போது இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான அனிருத் ட்விட்டர் வலைத்தளத்தில் ‘தமிழால் இணைவோம்’ என்று பதிவிட்டு இருந்தார். அனிருத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிம்புவும் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தமிழால் இணைவோம்’ என்ற பதிவை வெளியிட்டுள்ளார். ட்விட்டர் வலைத்தளத்தில் தற்போது அனிருத் மற்றும் சிம்புவிபின் பதிவு ரெண்டிங்கில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….