திரையுலகில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் பிரபு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இரண்டாவது மகனான பிரபு தமிழ் சினிமாவில் 1982-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சங்கிலி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் இந்தியில் வெளியான கழிச்சரம் என்ற படத்தின் ரீமேக். ‘சங்கிலி’ வெளியான பிறகு நடிகர் பிரபு தொடர்ந்து 6 புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

அதன் பின் கங்கை அமரன் இயக்கத்தில் கோழி கூவுதே என்ற ரொமான்டிக் படத்திலும் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் நல்ல வெற்றிப்படமாக அமைந்தது. சினிமாவிற்கு வந்த புதிதில் பிரபு 30 திரைப்படங்களில் நடித்தார் அதில் 19 திரைப்படத்தில் தனது தந்தை நடித்த படத்தில் நடித்து இருந்தார். அதில் சில திரைப்படங்கள் நீதிபதி, சந்திப்பு, மிருதங்க சக்கரவர்த்தி ஆகும்.

பின்பு தந்தை படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு கதாபாத்திரங்களுக்கு முக்கியதுவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அதாவது ஜி. எம் குமரனின் ‘அறுவடை நாள்’ மற்றும் மணிவண்ணனின் ‘பாலைவன ரோஜாக்கள்’. பாலைவன ரோஜாக்களில் சத்யராஜுடன் இணைந்து நடித்து இருந்தார். இவர்களது கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்க துவங்கினார்கள்.

இளம் வயதில் கதாநாயகனாக நடித்து கொண்டிருந்த பிரபு வயதாக ஆகா தனது வயதிற்க்கேற்ப கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். 2004-ஆம் ஆண்டில் வெளியான ‘வசூல் ராஜ எம்.பி.பி.எஸ் படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் உடன் இணைந்து நடித்து இருந்தார். 2005-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ படத்தில் துணை நடிகராக நடித்தார். தொடர்ந்து உனக்கும் என்னாகும், தாமிரபரணி, அயன், பில்லா, கந்தசாமி, ராவணன், 3, போன்ற பல வெற்றி படங்களில் துணை நடிகராக நடித்து இருக்கிறார்.

நடிகர் பிரபு இன்றுடன் சினிமாவில் 40 வருடங்களை நிறைவு செய்கிறார். இவர் திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் பிரபுவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்ததிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.