காளையுடன் கெத்தாக தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன சூர்யா… வைரல் வீடியோ!

sURIYA

நடிகர் சூர்யா காளையுடன் நடந்து சென்ற படியே தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலகி வருகிறது.

தமிழகத்தில் சித்திரை முதல்நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடி மகிழ்இன்று சித்திரை 1ஆம் தேதி, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் தமிழக மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள், முக்கிய பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விரைவில் பாலாவுடன் சூர்யா 41 பட படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதால் தினமும் காலையில் சூர்யா காளைகளுடன் பயிற்சி எடுத்து வருகிறார். அப்படி இன்று காலை காளையுடன் பயிற்சிக்கு சென்ற படியே நடிகர் சூர்யா தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அதில் “என் தமிழ்… இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என சூர்யா தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….