இயக்குனர் ராம் மற்றும் நிவின் பாலி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

பிரபல இயக்குனர் ராம் பல வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கி இருக்கிறார். அதாவது ‘கற்றது தமிழ்’ படத்தில் துவங்கி தங்க மீன்கள், தரமணி, சவரகத்தி, பேரன்பு ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இயக்குவதை தாண்டி சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தற்போது இவர் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் ராம் இயக்கம் படத்தில் பிரபல மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை சிம்புவின் ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் துவங்கியது.

இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிப்ரவரி மாதம் நிவின் பாலி மற்றும் சூரியின் காட்சிகள் படமாக்க பட்டது. விறுவிறுப்பாக நடந்து வந்த மொத்த படத்தின் படப்பிடிப்பு பணிகளும் நேற்று நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். மேலும் இந்த தகவலை நடிகர் நிவின்பாலி, சூரி மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.