தமிழ் சினிமா நாசமாக இவங்க தான் காரணம்… விஜய், அஜித்தை கழுவி ஊற்றிய பிரபல நடிகர்!

விஜய் மற்றும் அஜித்துக்கு தயாரிப்பாளரும் நடிகருமான அருண்பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருணாஸ் நடித்துள்ள ஆதார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி தனியார் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய அருண்பாண்டியன், தமிழ் திரையுலகின் பொற்காலம் இப்போது இல்லை. நாங்கள் நடித்த காலம் தான் உண்மையான பொற்காலம். இப்போது வேற்றுமொழி படங்கள் தான் தமிழ் சினிமாவை ஆள்கின்றன.

விஜய், அஜித் பெரும் தொகையை அவர்களே சம்பளமாக பெற்றுக் கொள்வதால் படத்தின் தரம் குறைவதாக தெரிவித்த அருண் பாண்டியன். மற்ற மொழி திரைப்படங்கள் தான் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் குற்றச்சாட்டினார்.

நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் நடிக்கும் படத்துக்கான செலவு மிகவும் குறைவு.படத்தின் பட்ஜெட்டில் 90% அவர்களின் சம்பளத்துக்கு போய்விடுகிறது மீதமுள்ள 10 சதவீதம் தான் படத்துக்கு செலவு செய்யப்படுகிறது என வேதனை தெரிவித்தார்.

எங்கள் காலத்தில் 10 சதவீதம் மட்டுமே சம்பளமாக வாங்கினோம் 90 சதவீதம் படத்துக்குத்தான் செலவு செய்யப்பட்டது. இதனாலேயே தமிழ் சினிமா பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….