நடிகர் தனுஷின் ‘The Gray Man’ படத்தின் முதல் லுக் வெளியானது!

தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் தனுஷ், சமீபத்தில் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ’தி க்ரே மேன்’ எனப் பெயரிட்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

இயக்குனர் ஜோ ரூஸ்ஸோ மற்றும் அந்தோணி ரூஸ்ஸோ இணைத்து ’தி க்ரே மேன்’ படத்தை இருபது கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வந்தனர். தற்போது இந்த படத்தில், தனுஷின் முதல் லுக் போஸ்டரை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. போஸ்டரில் தனுஷ் ஒரு காரின் டாப்பில் ரத்தக்கறைகளுடன் நிற்கிறார்.

மாஸாக இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’தி க்ரே மேன்’ படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது தனுஷ் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *