திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு பதிலளித்த ரம்யா பாண்டியன்!

தமிழில் ஜோக்கர் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு, ஆண் தேவதை, ராமே ஆண்டாளும் ராவண ஆண்டாலும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அத்துடன் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார்.

ரம்யா பாண்டியன் சில மாதங்களுக்கு முன்பு தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அவை இணைய தளங்களில் தீயாய் பரவின. படவாய்ப்புகளும் குவிந்தன. இந்தநிலையில் ரம்யா பாண்டியன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். ஒரு ரசிகர் உங்களுக்கு எப்போது திருமணம்? என்று கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதிலளித்த ரம்யா பாண்டியன் கூறும்போது, திருமணம் செய்து கொள்ள முதலில் ஒருவரை நான் கண்டுபிடிக்க வேண்டும். அவருக்கு என்னை பிடிக்க வேண்டும். இன்னும் அப்படி நான் ஒருவரை கண்டுபிடிக்கவில்லை. எனவே, இப்பொது திருமணத்திற்கு வாய்ப்பு இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *