வேட்டைக்காரன் பட நடிகர் மறைவு : திரை உலகினர் அதிர்ச்சி.

சலீம் கோஸ், தமிழ் சினிமாவின் பிரத்யேக திறமைக்கொண்ட வெகு சில நடிகா்களில் மிக முக்கியமான ஒருவர். நாடகத்துறையில் பல காலம் சிறப்பாக நடித்து பெயர் பெற்றவர். புனே திரைப்பட கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.

கமல்ஹாசன் -பிரபு நடித்து வெளியான “வெற்றி விழா” திரைப்படத்தில் “ஸ்டீபன் ராஜ்” என்ற கதாபாத்திரத்தை ஏற்று, சன்னமாக பேசி மிரட்டிய வசனங்கள் அப்போது வெகு பிரபலம்.

கடைசியாக விஜய் நடித்த “வேட்டைக்காரன்” படத்தில் வேதநாயகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர். அவருடைய குரலும், உச்சரிப்பும் தனித்தன்மை கொண்டது.

70 வயது நிரம்பிய சலீம் கோஸ் மும்பையில் தனது வீட்டில் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இதனால் மொத்த திரையுலகமும் வேதனையில் ஆழ்ந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. அவர் வெற்றிவிழாவில் நடித்தது ஜிந்தா கேரக்டர்!
    ஸ்டீபன் ராஜ் கமல்