குட்டையான ஹேர் ஸ்டைல்.. கோட் சூட்டில் செம்ம ஸ்டைலாக கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தனது தந்தையின் தயாரிப்பில் வெளியான ‘பைலட்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பின்னர் ’இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து தற்போது கலக்கி வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, பைரவா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுக்கப்பட்ட மகாநடி திரைப்படம் கீர்த்திக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், சமூத்திரக்கனி, நதியா ஆகியோர் நடித்துள்ள சர்காரு வாரி பட்டா படம் வரும் 12- ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Keerthy Suresh (aka) Keerthi Suresh photos stills & images

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் குட்டையான ஹேர் ஸ்டைலில் கோட் சூட் அணிந்து படு கலக்கலாக வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது.

நீல நிற கோட் சூட்டில் ஹாலிவுட் ஹீரோயின் லெவலுக்கு கலக்கலாக போஸ் கொடுத்திருக்கும் கீர்த்தியை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடி போயுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *