“நெஞ்சுக்கு நீதி” படத்துக்கு சென்சார் குடுத்த சர்டிபிகேட்! – எதிர்பார்த்தது தான்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கு படம் தான் “நெஞ்சுக்கு நீதி” . இந்த படத்தை தயாரித்தது “போனி கபூர்”. இந்த படம் “ஆர்டிகள்-15” படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் என்பதை தாண்டி இந்த படத்தின் எதிர்பார்ப்பு, டீசர் வெளியானது முதலே எகிறியது. உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் ஆன பின்பு வெளி வரும் முதல் படமாக இது இருப்பது கூடுதல் சிறப்பு.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த கதையை தமிழில், களத்துக்கு ஏற்ப மாற்றி எழுதி இருப்பதாக இந்த படத்தின் வசன எழுத்தர் தமிழரசன் கூறி இருந்தார். அருண்ராஜா இயக்கத்தில் “கனா” தணிக்கையில் பெரும் பாராட்டுகளை பெற்ற படம்.

தற்போது “நெஞ்சுக்கு நீதி” படம் “மே-20” வெளியாக உள்ள நிலையில், இந்த படம் தணிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது படம் “U/A” சான்றிதழ் பெற்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *