பிறந்தநாளன்று அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்ட சாய் பல்லவி!

சிறுவயதில் இருந்து கலை துறையில் ஆர்வம் கொண்ட சாய் பல்லவி ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். மேலும் நடனத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர், எந்த ஒரு நடன பயிற்சிக்கும் செல்லாமல் பல நடன போட்டிகளில் கலந்துக்கொண்டு பிரபல டான்சராக வளம் வந்தார்.

மலையாள இயக்குனர் அல்போன்ஸ் இயக்கத்தில் உருவான ‘ப்ரேமம்’ படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார் சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்தில் கலி, அதிரன் ஆகிய படத்திலும் நடித்து இருந்தார். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

சாய் பல்லவி மாரி-2, என்.ஜி.கே ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார். இன்று சாய்பல்லவி தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இணையதளத்தில் ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் சாய்பல்லவிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.தற்போது தன் பிறந்தநாளை முன்னிட்டு, தான் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் சாய் பல்லவி.

கவுதம் ராதாகிருஷ்ணன் இயக்கும் #Gargi என்ற படத்தில் சாய்பல்லவி நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் உருவாக உள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டருடன் இந்த தகவலை சாய்பல்லவி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தை பற்றிய மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *