ஆதி,நிக்கி திருமண தேதி வெளியானது!

மிருகம், ஈரம், அரவான், மரகத நாணயம், யாகவராயினும் நாகாக்க உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஆதி. தற்போது இவர் தெலுங்கு படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ்,தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் மலையாள சினிமா மூலம் தன் திரையுலக பயணத்தை துவங்கினார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் நிக்கி கல்ராணி தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ரகசியமாக காதலித்து வந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் ரகசியமாக குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களது நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது இவர்களது திருமணம் எப்போது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு திருமண தேதியை வெளியிட்டுள்ளனர் நிக்கி மற்றும் ஆதி. வருகிற மே மாதம் 18-ஆம் தேதி இவர்களது திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…