மாப்பிள்ளை கிடைக்க சிரமமாக உள்ளது-கங்கனா

தமிழில் தாம் தூம், தலைவி படங்களில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார். அடிக்கடி சர்ச்சை கருத்துக்களையும் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். தற்போது, இந்தியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து இருந்தார்.

அந்த சம்பவம் சமீபத்தில் இணையதளங்களில் வ்சரலாக பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் கங்கனா பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்கள் நிஜத்திலும் அக்ஷன் கேர்ள் தானா? என்ற கேள்வி கேட்க அதற்கு கங்கனா அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கங்கனா நான் நிஜ வாழ்க்கையில் மிகவும் அமைதியான பெண். நான் யாரையும் அடித்தது கூட கிடையாது. ஆனால் உங்களை போல் சிலர் வதந்திகள் பரப்புவதால் தான் எனக்கு மாப்பிள்ளை கிடைக்க சிரமமாக உள்ளது என்று கூறியுள்ளார். தற்போது இணையவாசிகள் இணையத்தில் #marryme என்ற ஹாஷ்டகை வைரலாகி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…