பிறந்தநாளன்று மர்மமான முறையில் இறந்து கிடந்த நடிகை!

மாடல் அழகியாக வளம் வந்து பின்னர் விளம்பர படங்களில் மற்றும் படங்களில் நடித்து வருபவர் சஹானா. கேரளாவை சேர்த்த இவர் கோழிக்கோட்டில் வசித்து வந்துள்ளார். இவர்க்கு வயது 21. தனது 21-வது பிறந்தநாளன்று சஹானா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக அவரது கனவன் ஷாஜித் கூறியுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஓர் ஆண்டே முடிந்துள்ளது.
ஆனால் இதற்கு சஹானாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சஹானா பிறந்தநாளன்று மதியம் தாயிடம் நன்றாக பேசியதாக சஹானாவின் தாயார் கூறுகிறார். சாஜித் சஹானா மாடலிங் துறையில் சம்பாதிக்கும் பணத்தை கட்டாய படுத்தி வாங்கி உள்ளார் என்றும் பணம் தராததால் சஹானாவை பல முறை அடித்து துன்புறுத்தி உள்ளதாகவும் சஹானா என்னிடம் கூறி உள்ளார் என்று சஹானாவின் தம்பி தற்போது கூறியுள்ளார்.
அதனால் சஹானாவின் மறைவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இன்னும் மூன்று நபருக்கு தொடர்பு இருப்பதாகவும், சாஜித் சஹானாவை அடித்து துன்புறுத்துவதை அக்கம் பக்கத்தினர் பார்த்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது சாஜித்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.