AK 61 படத்தில் கைகோர்க்கும் முக்கிய பிரபலம் !!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாக இருக்கும் படம்தான் AK 61. இப்படத்தில் வலிமை படத்தின் தாயாரிப்பாளர் மீண்டும் கைகோர்த்து உள்ளார்.
இந்நிலையில் AK 61 படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கி தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலில் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

வங்கி கொள்ளையை முக்கிய அங்கமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகர் அஜித் வில்லன் மற்றும் ஹீரோவாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே நடிகர் சமுத்திரகனி தற்போது AK 61 படத்தில் நடித்து வருவதாக தெரிகிறது. இதனை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் உறுதி படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.