சித்ரா மரணத்தில் திடீர் திருப்பம்… யார் அந்த அரசியல் பிரமுகர்?- உண்மையை உடைத்த பெற்றோர்!

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த வழக்கை நியாயமான முறையில் மறு விசாரணை செய்ய வேண்டும் என சித்ரா பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
சித்ரா கணவர் ஹேம்நாத் தான் சித்ராவை கொலை செய்திருப்பதாகவும், சித்ரா கழுத்தில் கடித்த தடயம் இருப்பதாகவும் புகைப்பட ஆதாரத்தை காட்டி சித்ரா பெற்றோர் பேட்டி
வழக்கில் இருந்து தப்பிக்க திசை திருப்ப ஹேம்நாத் பொய்யான தகவல்களை தற்போது கூறி வருவதாகவும் சித்ராவின் சொத்தை அபகரிக்க ஹேம்நாத் முயற்சிப்பதாகவும் சித்ரா தாயார் குற்றச்சாட்டியுள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம்தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் ஜாமீனில் விடுதலை ஆகிய சித்ரா கணவர் ஹேமநாத் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சித்ரா உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.