விக்னேஷ்சிவன், நயன்தாரா வாட்ஸ் ஆப் உரையாடல் வெளியானது!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லலித் குமார் தயாரிப்பில் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, தம்பி ராமையா போன்றவர்கள் நடித்து இருந்தார்கள்.

இந்த படத்தில் இருந்து ‘Two Two Two’ பாடல், ‘நான் பிழை’ மற்றும்’டிப்பம் டப்பம்’ பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. ‘Triangle’ காதல் கதையான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்று இருந்தது. இந்த நிலையில் வருகிற 27-ஆம் தேதி ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தலத்தில் வெளியாக உள்ளது.

இந்த அறிவிப்பை வித்தியாசமான ஒரு வீடியோ மூலம் டுவீட்டரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப் குழுவில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் கதாபாத்திரங்களான ராம்போ, கதிஜா, கண்மணி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் வகையில் இந்த பதிவு உருவாக்கபட்டுள்ளது. தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *