யுவனுக்கு பரிசளித்த கார்த்தி!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘விருமன்’. இதில் இயக்குனர் ஷங்கரின் மகள் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். மேலும் ‘விருமன்’ படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜ அமைத்து இருக்கிறார். தற்போது கார்த்தி யுவனுக்கு ஒரு பரிசு ஒன்றை வழங்கி உள்ளார்.

உண்மையான நட்புக்கு மரியாதை கொடுப்பதில் மிகவும் கெட்டிக்காரர் நடிகர் கார்த்தி. அவர் நடித்த பருத்திவீரன், நான் மஹான் அல்ல, பையா, பிரியாணி மற்றும் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘விருமன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜ. கார்த்தியும், யுவன் சங்கர் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள்.

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜவுக்கு விலை உயர்ந்த பிரிமியம் காய் கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கார்த்தி. இரண்டு பேரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். சிறுவயதில் இருந்தே இருவரும் நண்பர்கள். திரையுலகில் யுவன் சங்கர் ராஜ 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை தொடர்ந்து அவருக்கு அந்த அன்பு பரிசை வழங்கியதாக நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *