மீண்டும் தளபதியுடன் இணையும் பிரகாஷ் ராஜ்!

தற்போது ‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு தளபதி-66 படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிவருகிறார். தளபதி-66 படம் காதல் கதையாக இருக்கும் என்றும் கூறி இருந்தார். இந்த படத்தில் ராஸ்மிகா, சரத் குமார், மோகன், ஷியாம் போன்ற பலர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு பணிகளும் தற்போது துவங்கி உள்ளது.

தளபதி-66 படத்தின் பணிகள் துவங்கி உள்ள இந்த நிலையில் தளபதி-66 படத்தில் புது அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தளபதியுடன் நடிகர் பிரகாஷ் ராஜும் இணைத்துள்ளார். இதில் தளபதியின் தந்தையாக நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் வெளி வந்த கில்லி, போக்கிரி, சிவகாசி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

தற்போது மீண்டும் இவர்கள் கூட்டணி இணைகிறது என்று கேள்வி பட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தை பற்றிய அதிகார பூர்மவானா தகவல் விஜியின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *