பரபரப்பு !! விமானத்தில் பூஜா ஹெக்டேவிடம் சில்மிஷம்..

விமான ஊழியர் ஒருவர் அத்துமீறி நடத்து கொண்டதாக பீஸ்ட் பட நாயகி குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் அந்த நாயகிக்கு பெரிய அளவில் புகழ் கிடைத்துள்ளது. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில் மும்பையில் இருந்து புறப்பட்ட இன்டிகோ விமானத்தில் தான் பயணித்தபோது அதில் இருந்த விமான ஊழியர் விபுள் நாகேஷ் என்பவர் அத்துமீறியதாக தெரிவித்துள்ளார்.

அவருடைய திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பூஜா கூறியுள்ளார். இண்டிகோ விமான நிறுவனத்தையும் தனது பதிவேட்டில் பூஜா ஹெக்டே டேக் செய்துள்ளார்.

169 ஆவது படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கும் கன்னட நடிகையான பூஜா ஹெக்டே தனியார் விமான ஊழியர் மீது நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *