வருமான வரி தாக்கல் செய்தால், ஒரே நாளில் ரீஃபண்டு

மாத சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவில் வருவோரும் தங்களின் ஆண்டு வருமானத்திற்கு உரிய வருமானச் அறிவித்தல்களை ஆண்டுதோறும் ஜூலை மாதம் இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

       அதேபோல் நிறுவனங்களும் தங்களின் தணிக்கை செய்யப்பட்ட தணிக்கை அறிக்கை மற்றும் வருமானம் கணக்கில் செப்டம்பர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்வது கட்டாயமாகும். வருமானவரி திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யத் தவறும் பட்சத்தில் அபராதத்துடன் அடுத்து வரும் மார்ச் மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.மாதச்சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவினரும், நிறுவனங்களும், தங்கள் வருமானத்திற்கு உரிய வரியை விட கூடுதலான வரியை செலுத்தி இருந்தால் உபரி வரியை (Refund) வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் வட்டியுடன் பெற்றுக் கொள்ள முடியும். 

சில நேரங்களில் 5 மாதம் வரையிலும் கால தாமதம் ஏற்படுவதுண்டு.இனிமேல் உபரி வரியை (Refund) பெறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தனிநபர் பிரிவினரும், மாதச் சம்பளம் வாங்குவோரும், நிறுவனங்களும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த மறுநாளே தங்களின் உபரி வரியை பெற்றுக்கொள்ள முடியும். வரி தாக்கல் செய்யும் இணையதளத்தையும் வரி செலுத்தும் இணையதளத்தையும் இனிமேல் இன்ஃபோசிஸ் நிறுவனமே நிர்வகிக்கப்போகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமையன்று இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *