என்னது சியோமி காரா – சியோமி ரசிகர்கள் குஷி

 உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி தற்போது கார் தயாரிப்பில் இறங்கியுள்ளது. டெஸ்லாவின் வளர்ச்சியும் வெற்றியும் கண்டு ஜியோமி நிறுவனமும் இத்துறையில் கால்பதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த யோக நிறுவனம் ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் தொழிற்சாலையை அமைக்க திட்டம் தீட்டி உள்ளது. மேலும் சீனாவின் மட்டுமல்லாமல் உலகில் அனைத்து இடங்களிலும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.சியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானலீ ஜூன் திட்டத்தின் படி 2024ஆம் ஆண்டுக்குள் சியோமி நிறுவனத்தின் இப்புதிய தொழிற்சாலையில் வருடத்திற்கு 3 லட்சம் கார்கள் என உற்பத்தி அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சியோமி முதல் முறையாகப் பெரும் திட்டமிடல் உடன் கார் அதுவும் எலக்டிர் கார் தயாரிப்புத் துறையில் இறங்கியுள்ளது. இத்திட்டத்திற்காகப் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனத்தில் இருந்து உயர் அதிகாரிகளைத் தேடி தேடி பிடித்துள்ளது சியோமி.சியோமி நிறுவனம் பெய்ஜிங்-ல் கட்டப்படும் இந்தத் தொழிற்சாலையை இரண்டு பகுதிகளாகக் கட்டப்போகிறது. இதேவேளையில் சியோமி தனது ஆட்டோமொபைல் பிரிவு வர்த்தகத்தின் தலைமையகம், விற்பனை, ஆராய்ச்சி அலுவலகத்தையும் பெய்ஜிங் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பகுதியில் அமைக்க உள்ளது. இந்தப் பகுதி முழுக்க முழுக்கச் சீன அரசால் பொருளாதார வளர்ச்சிக்கு உருவாக்கப்பட்ட பெய்ஜிங் ஈ-டவுன் அமைப்பால் உருவாக்கப்பட்டது.

சியோமி 2021 மார்ச் மாதத்திலேயே புதிய எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை மற்றும் வர்த்தகத்திற்காக அடுத்த 10 வருடத்திற்குச் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பிரிவு வர்த்தகத்திற்காகச் சியோமி தனி நிறுவனத்தை ஆகஸ்ட் மாதம் துவங்கியது. தற்போது தொழிற்சாலை கட்டும் பணியைத் துவங்கியுள்ளது.சியோமி தனது கார் வடிவம், விலை, உற்பத்தி அளவு என அனைத்தையும் கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்ட நிலையில், தொழிற்சாலை கட்டும் இதேவேளையில் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்காகச் சீனா முழுவதும் திறக்கப்பட்ட சியோமி கடைகள் தற்போது கார் விற்பனை செய்யும் கடைகளாக மாறப் போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *