கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களின் விவரம் இனி கண்காணிக்கப்படும் – ஒன்றிய அரசு திட்டவட்டம்

கடந்த சில நாட்களாகவே  இந்தியாவில் கிரிப்டோ கரன்சி முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு எந்த வரைமுறையும் இல்லை. அதாவது  ஒன்றிய அரசு தற்போது வரை கிரிப்டோ கரன்சிக்கு முழுமையாக அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும்  கிரிப்டோ கரன்சியில் வர்த்தகம் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஏற்கனவே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதால், இதனை முழுமையாக  முடக்க முடியாது. அதனால் கிரிப்டோ கரன்சிகென தனி விதிகள் அமைக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்து வந்தது.  மத்திய அரசு தற்போது இருக்கும் வருமான வரிச் சட்டம் மற்றும் வருமானத்தை வெளிப்படுத்தல் விதிகளில் கிரிப்டோகரன்சி போன்ற புதிய முதலீடுகளை இணைக்க முடிவு செய்துள்ளது.இதற்கான அறிவிப்பு வருகிற பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யும் போது வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய முதலீட்டாளர்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் செய்யும் கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் தகவல்களை முழுமையாகப் பெற வேண்டும் என்பதற்காக வருமான வரிச் சட்டம் 26A மற்றும் வருடாந்திர தகவல் ஒழுங்குமுறை விதிகளில் மாற்றம் செய்ய உள்ளது.இதேபோல் வெளிநாட்டில் இந்தியர்கள் வைத்துள்ள கிரிப்டோகரன்சி சொத்துக்களின் விபரங்களைச் சமர்ப்பிக்கும் விதிகளையும் ஒன்றிய  அரசு மாற்ற உள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் வெளிநாட்டில் வைத்துள்ள அனைத்து கிரிப்டோ சொத்துக்களின் விபரங்களையும் பெற முடியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published.