கிரிப்டோகரன்சியை பற்றி தெரியுமா!! அப்போ உங்களுக்கு வேல கன்பார்ம்

இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே  கிரிப்டோகரன்சி முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. கிரிப்டோ கரன்சி பற்றி முழுவதும் தெரியாதவர்கள் தான் இதில் அதிகமாக முதலீடு செய்து வந்தனர். குறிப்பாக இளைஞர்கள் தான் கிரிப்டோகரன்சியால் அதிகம் கவரப்பட்டனர் . கிரிப்டோகரன்சி குறித்து எந்த புரிதலும் இல்லாமல் முதலீடு செய்த  முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இது ஒருபுறமிருக்க வருங்காலத்தில் கிரிப்டோகரன்சிகள்  தான் உலகத்தை ஆளும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் லிங்கிடு இன்(Linkedin ) இணைய தளத்தில் கிரிப்ட்கரன்சியை குறித்து தெரிந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள்  வந்துள்ளது. அதாவது லிங்கிடு இன் பிட்காயின், எத்திரியம், பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற தலைப்புகளுடன் கூடிய இடுகைகள் அமெரிக்காவில் 2020 முதல் 2021 வரை 395 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மென்பொருள் மற்றும் நிதித் துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகள் இருந்தாலும் , கிரிப்டோகரன்சியை பற்றி தெரிந்து கொண்டவர்களின்  தேவை அதிகரித்து வருகிறது. 

கடந்த 2021 ஆம் ஆண்டில்  உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் கிரிப்டோ மற்றும் பிளாக்செயின்கான ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சுமார்  $30 பில்லியன் செலவிட்டுள்ளனர். மேலும்  எலான்  மஸ்க் மற்றும் ஜாக் டோர்சே போன்ற முன்னணி தொழிலதிபர்கள் கிரிப்டோகரன்சியின் கொடுத்த ஆதரவால்  அதன் மதிப்பு பல மடங்கு பெருகிவிட்டது.இந்தியாவிலும், அமிதாப் பச்சன், சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங் போன்ற பிரபலங்கள் இதனை  ஆதரித்தனர். இதனால் தான் கிரிப்டோ கரன்சிக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு பெற்றது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *