பொழுதுபோக்கு துறையில் கால் பாதிக்கும் முகேஷ் அம்பானி 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரீடைல் மற்றும் டெலிகாம் வர்த்தகத்தைத் தாண்டி சமீபத்தில் மீடியா – எண்டர்டெயின்மென்ட் பிரிவு வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என முடிவை எடுத்தது.இத்திட்டத்தின் படி ஜீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைக் கைப்பற்ற முயற்சி செய்து தோல்வி அடைந்த நிலையில் ஸ்போர்ட்ஸ் எண்டர்டெயின்மென்ட் பிரிவில் மிகப்பெரிய அளவிலான திட்டத்தை வகுத்து வருகிறது.

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது மீடியா முதலீட்டாளர்களுடன் இணைந்து சுமார் 12,000 கோடி ரூபாய் முதலீட்டை எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிராட்கேஸ்டிங் பிரிவில் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.இந்திய பொழுதுபோக்குத் துறையில் ஜீ – சோனி நிறுவனத்தின் இணைப்பிற்குப் பின்பு போட்டி மிகவும் கடுமையாகியுள்ளது என்றால் மிகையில்லை, இந்தப் போட்டியைச் சமாளிக்கவும் தொடர்ந்து ரிலையன்ஸ் மீடியா துறையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிராட்காஸ்டிங் பிரிவில் சுமார் 12,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி மீடியா உலகின் டான் ஆக விளங்கும் ரூபர்ட் முர்டோக்-ன் மகன் ஜேம்ஸ் முர்டோக் மற்றும் ஸ்டார் டிஸ்னி இந்தியாவின் முன்னாள் தலைவர் உதய் சங்கர் இணைந்து வாய்காம் 18 நிறுவனத்தில் பெரும் தொகை முதலீடு செய்து சுமார் 40 சதவீத பங்குகளைப் பெற உள்ளதாகத் தெரிகிறது.

வாய்காம்18 நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வைத்திருக்கும் வாய்காம் CBS நிறுவனம் சுமார் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாகத் திட்டமிட்டு உள்ள நிலையில் இதை ஜேம்ஸ் முர்டோக் மற்றும் உதய் சங்கர் ஆகியோர் கைப்பற்ற உள்ளனர்.

இந்தப் பங்கு கைப்பற்றலுக்குப் பின்பும் வாய்காம்18 நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் TV18 தான் அதிகப் பங்குகள் உடன் ஆதிக்கம் செலுத்த உள்ளது. தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் பங்கு விற்பனை மூலம் வாய்காம்18 நிறுவனம் 4 பில்லியன் டாலர் அதாவது 30000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 12,000 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற உள்ளது.

 இந்த 12,000 கோடி ரூபாய் முதலீட்டை ஜேம்ஸ் முர்டோக் மற்றும் உதய் சங்கர் ஆகியோரின் கூட்டணி நிறுவனமான லூபா சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வாயிலாகச் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. லூபா சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் உதய் சங்கர் 51 சதவீத பங்குகளையும், ஜேம்ஸ் முர்டோக் 49 சதவீத பங்குகளையும் வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *