ரிலையன்ஸ் கட்டுப்பாட்டில் வருகின்றன பிக் பஜார் கடைகள்

‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், ‘பியூச்சர் ரீடெய்ல் ஸ்டோர்’களின் செயல்பாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து, இத்துறையைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:ரிலையன்ஸ் நிறுவனம், பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் ‘பிக்பஜார்’ ஸ்டோர்களை கையகப்படுத்தி, தன்னுடைய பிராண்டு ஸ்டோராக மாற்ற துவங்கி உள்ளது.

மேலும், பிக் பஜாரில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து, தன்னுடைய சம்பளப் பட்டியலுக்கு அவர்களை மாற்ற துவங்கி இருக்கிறது.கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் , கிஷோர் பியானி தலைமையில் செயல்பட்டு வந்த பியூச்சர் குழுமத்தின் சில்லரை, மொத்த வணிகங்கள் மற்றும் கிடங்கு வசதிகளை 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு வாங்க ரிலையன்ஸ் ஒப்பந்தம் செய்தது.ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக, ‘அமேசான்’ நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு நடுவர் மன்றத்துக்கு சென்றது.மேலும், உள்நாட்டிலும் சில வழக்குகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்னும் முழுமையாக தீர்ப்புகள் வரவில்லை.

 இந்நிலையில், பியூச்சர் நிறுவனம், அதன் ஸ்டோர்களுக்கான வாடகையில் பாக்கி வைக்கத் துவங்கியது. இட உரிமையாளர்கள் பலர் இது குறித்து ரிலையன்சிடம் புகார் செய்தனர். இதனால் ரிலையன்ஸ் வாய்ப்பிருந்த இடங்களில், உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து, பியூச்சருக்கு உள் குத்தகைக்கு வழங்கியது.வழக்கு நீண்டுகொண்டே செல்ல, வாடகை பிரச்னையும் அதிகரிக்க துவங்கியது. பல இட உரிமையாளர்கள், குத்தகையை ரத்து செய்து, வேறு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட துணிந்தனர்.இதனால், ஒப்பந்தம் செய்திருக்கும் பியூச்சர் வணிகத்தின் மதிப்பு சரியக்கூடும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ரிலையன்ஸ், அவற்றை தன்னுடைய பிராண்டு ஸ்டோர்களாக மாற்றும் வேலையை துவங்கி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…