டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை துறையில் கால் பதிக்கும் டாடா குழுமம்.

கடந்த சில வருடங்களில் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறையானது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி குக்கிராமங்களில் உள்ள மளிகைகடை வரை அனைவராலும் பயன்படுத்தக்குடிய விதத்தில்   டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில்  Google Pay, Phonepe மற்றும் Paytm போன்ற செயலிகள் முன்னிலையில் இருக்கும் போது அதற்கு போட்டியாக டாடா குழுமம்  டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நிறுவனத்தை  தொடக்க போவதா டாடா குழுமம் தெரிவித்து உள்ளது. 

இதற்காக NPCI-யிடம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை  செயலி தொடங்க  அனுமதி கேட்டுள்ளது .UPI அமைப்பை இயக்க ஐசிஐசிஐ வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது .  இதன் யூ.பி. ஐ சேவை பகிந்துகொள்ள பல வங்கிகளுடன் டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  

டாடா குழுமம் ஏற்கனவே  இந்தியாவில் உப்பு முதல் எஃகு வரை பல துறைகளில் கால் பதித்து வெற்றி கண்ட நிலையில், தற்போது  டாடா குழுமம்  டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை துறையில் என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.  Amazon Pay மற்றும் WhatsApp pay போன்ற செயலிகள் Google Pay, Phonepe அளவிற்கு வெற்றி அடைய வில்லை என்பதால் டாடா குழுமத்தின் செயல்பாடு எந்த அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா குழுமத்தைச் தொடர்ந்து இந்தப் பட்டியலில் Bigbasket, போன்ற  சில நிறுவனங்களும் இந்த துறையில் கால் பதிக்க உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.