தொழில்துறை வளர்ச்சிக்கு கை கொடுக்குமா தமிழக பட்ஜெட்

2022 – 23 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட்டை    நிதி அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று  தாக்கல் செய்தார். இதில் அனைத்து துறைகளுக்கான  பட்ஜெட் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழக தொழில் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடமும் தொழில் துறையானது, மிகப்பெரிய  நஷ்டத்தை சந்தித்தது.பெரிய, பெரிய  நிறுவனங்களும்  நஷ்டத்தைச் சந்திக்க நேரிட்டது. 

இதனால் வேலையின்மை, உற்பத்தி சார்ந்த தயாரிப்பு பொருட்கள் பணி பாதிப்பு , பொருளாதார இழப்பீடு   என தமிழக தொழில்துறை பெரிய பாதிப்பை சந்தித்தது. 

சட்டப்பேரவையில்  நிதி அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் திமுக ஆட்சியில்  தமிழகம் முழுக்க தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல திட்டங்களை வகுத்துள்ளார். 

அதன்படி முதற்கட்டமாக  ரூ.3,268 கோடி முதலீட்டில் தமிழகம் முழுக்க மாவட்ட வாரியாக சிறு குறு தொழில்கள் ஊக்குவிக்கப்படும்.கோவை, வேலூர் உள்பட  5 மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். புதிய காலணி மற்றும் தோல் தொழில் கொள்கை உருவாக்கப்படும். 

ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கப்படும். 2030-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடையும் வகையில், புதிய கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி. தொழில் வளர்ச்சியை பரவலாக்கும் வகையில், மதுரை, திருவள்ளூர், அமைக்கப்படும். 

Leave a Reply

Your email address will not be published.