அட இது கூட நல்லா இருக்கே..! வார சம்பளத்திற்கு மாறும் முன்னணி நிறுவனங்கள்

மாத சம்பளத்தில் இருந்து வார சம்பளத்திற்கு மாறவுள்ளதாக இந்தியாவின் முன்னணி நிறுவனம் தெரிவித்த நிலையில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர்.
இந்தியாவில் முன்னணி நிறுவனமான இந்தியா மார்ட் நிறுவனம் முதல் முறையாக தனது ஊழியர்களுக்கு மாதத்தில் 4 முறை சம்பளம் அளிக்கும் மாற்றத்தைக் கொண்டு வரவிருக்கிறது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் சுமார் 3400க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட இந்த நிறுவனம் வார சம்பள முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் மாத கடைசியில் ஏற்படும் பொருளாதார நிதி நெருக்கடி மற்றும் மாத இறுதியில் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம் என ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற பல முன்னணி நாடுகளில் இந்த முறையானது நடைமுறையில் உள்ள நிலையில், இந்தியாவில் முதல் முறையாக இந்தியா மார்ட் நிறுவனம் தான் வார சம்பளம் முறையை அறிமுகம் செய்கிறது.
ஆனால், இது வீட்டு வாடகை, ஈஎம்ஐ(EMI) போன்ற சுமைகளை கொண்ட ஊழியர்களுக்குப் பிரச்சனை தான் ஒரு சிலர் வருத்தம் தெரிவித்தனர்.வார இறுதி சம்பளம் என்ற இம்முறையானது ஏற்கனவே நம்மூரில் உள்ள சிறு,குறு தொழில்களில் நடைமுறையில் உள்ள ஒன்றாகும்.
இதைத்தான் தற்போது பெரும் நிறுவனங்கள் நடைமுறைக்கு கொண்டு வருகிறது என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.