5 நிமிடங்களில் இட்லி பொடி செய்துவிடலாம்!

பொதுவாக அனைவரது வீட்டிலும் அதிகமாக உண்ணப்படும் உணவுகளில் இட்லி பொடி ஒன்றாகும். டிபன் உண்ணவிரும்புவர்கள் இட்லி, தோசை இரண்டிற்கும் இட்லி பொடியை தொட்டுக்கையாக வைத்து சாப்பிடுவார்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் காலையில் அவசர அவசரமாக குழம்பு செய்வதற்கு பதிலாக வீட்டிலேயே இட்லி பொடியை அரைத்து வைத்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • உளுத்தம் பருப்பு – 1/2 கப்
  • கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
  • வர மிளகாய் -10
  • எள்ளு விதைகள் -1/2
  • கருவேப்பில்லை சிறிதளவு
  • பெருங்காய தூள்-1/4 டீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு

முதலில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, எள்ளு விதைகள், கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வாணலியில் போட்டு வறுத்து குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், செட்டிநாடு இட்லி பொடி தயார். இந்த இட்லி பொடியை நல்லெண்ணெயுடன் தேவையான போது சேர்த்து சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…