டோன் பிரியாணி செய்வது எப்படி

தென்னிந்திய பிரியாணி வகைகளில் இதுவும் ஒரு பரபலமான பிரியாணி ஆகும்.இது ஹதராபாத் பிரியாணி போன்று அல்லாமல் காரம் சற்று குறைவாகவே இருக்கும்.இதனை சீரக சம்பா அரிசி,புதினா இலை,மல்லி இலை,ஸ்பைஸஸ் பயன்படுத்தி மிக சுவையாக செய்யலாம்.இந்த பிரியாணியை பாக்கு ஓலை தட்டில் பரிமாறப்படுவதால் இதனை டோன் பிரியாணி என்று கூறுகிறார்கள்.இப்போது இந்த டோன் பிரியாணி எவ்வாறு தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • 1 கிலோ கிராம் கோழி
 • 250 கிராம் தயிர்
 • 1 தேக்கரண்டி உப்பு
 • 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 1 தேக்கரண்டி மிளகாய் பொடி
 • 1 தேக்கரண்டி மஞ்சள்
 • பிரதான உணவு
 • 7 Numbers பச்சை மிளகாய்
 • 1 கப் கொத்தமல்லி இலை
 • 1/2 கப் புதினா இலை
 • 1 கிலோ கிராம் அரிசி
 • 4 Numbers வெங்காயம்
 • 1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்
 • 2 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்
 • 4 Numbers இலவங்கப்பட்ட இலை
 • 1 தேக்கரண்டி கல்பாசி
 • தேவையான அளவு இலவங்கப்பட்டை
 • தேவையான அளவு கிராம்பு
 • தேவையான அளவு நட்சத்திர சோம்பு
 • தேவையான அளவு பெருஞ்சீரகம்
 • தேவையான அளவு கருப்பு ஏலக்காய்
 • வெப்பநிலைக்கேற்ப தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

1.தயிர், உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கோழியை 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

2.ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி கரம் மசாலாவைச் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். இப்போது நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.

3.மேலும் அதில் சிக்கன் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்கு வதக்க வேண்டும்.பின்பு ஒரு விசில் குக்கரின் சிக்கனை மட்டும் சமைக்க வேண்டும்.பின்பு அரைத்த பச்சை பேஸ்ட்,இஞ்சி பூண்டு விழுதை சமைத்த சிக்கனில் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

4.பின்பு ஊற வைத்த அரிசி,தேவையான அளவு உப்பு சேர்த்து மறுபடியும் குக்கரில் ஒரு விசில் வைக்க வேண்டும்.இப்போது சீவையான பிரியாணி தயார்.இதனை பாக்கு ஓலை தட்டில் பரிமாறி சாப்பிட்டால் அதன் சுவை மேலும் அதிகமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.