ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய் அல்வா..!

நெல்லிக்காய் வகைகளில் ஒன்றுதான் மலை நெல்லிக்காய். இதில் சாதாரண நெல்லிக்காயை விட அதிக அளவு வைட்டமின்கள் நிறைந்துள்ளன.மலை நெல்லிக்காயில் பாலிஃபீனால்கள், கனிமச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின்கள் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது. இதை தினமும் எடுத்துக் கொள்வதால் இதய நோய்களை தடுப்பதோடு சர்மா செல்களையும் பாதுகாக்கும்.
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பது மட்டுமல்லாமல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இதை தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை நீக்கி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
விதவிதமாக சமைத்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான ஆரோக்கியத்துடன் சுவை நிறைந்த ரெசிபி.
நெல்லிக்காய் அல்வா செய்ய தேவையான பொருட்கள்,பெரிய நெல்லிக்காய்,சர்க்கரை,ஏலக்காய் தூள்,முந்திரி பருப்பு, கேசரி பவுடர் மற்றும் நெய்.
முதலில் நெல்லிக்காயை சீவி நன்கு அரைத்து கொள்ளவும்.ஒரு கடாயில் நெய் சேர்த்து நெல்லிக்காய் விழுது போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் சர்க்கரை சேர்த்து கிளறி ஏலக்காய் தூள்,கேசரி பவுடர் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் நெல்லிக்காய் அல்வா தயார். புளிப்பும் தித்திப்பும் கலந்த சுவையில் இருக்கும் இந்த அல்வா நமது உடல் நலத்தையும் பாதுகாக்கும் .