கரும்பு பாயாசம் செய்வது எப்படி

கரும்பு பாயசமானது ஒரு தனித்துவமான இனிப்பு. இதை தயாரிக்க சர்க்கரையோ அல்லது வெல்லமோ தேவையில்லை. இயற்கையாக கரும்பு சாற்றில் உள்ள இனிப்பே இதற்கு பயன்படுத்தப்படுகிறது.இனிப்பு பண்டங்கள் மீது அதிக ஈர்ப்பு உள்ள மக்களுக்கு கரும்பு பாயாசம் சரியான தேர்வாகும். இதை செய்வதும் அவ்வளவு கடினமான காரியமில்லை. மிக எளிதாகவே கரும்பு பாயாசத்தை செய்ய முடியும். இதில் அரிசி போன்ற மென்மையான பொருட்களை கலப்பதன் மூலம் இதன் சுவை மற்ற பாயாசங்களை காட்டிலும் சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது.இது கண்டிப்பாக உங்களுக்கு பிடித்த உணவாக அமையும் என நம்புகிறோம். இதை உண்பவர்களை மேலும் வேண்டும் என கேட்க வைக்கும். இப்போது அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை பற்றி கொஞ்சம் விளக்கமாக பார்ப்போம்.இரண்டு பேருக்கு உணவளிக்கும் அளவில் தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்

  1. 500 mililitre கரும்பு ஜீஸ்
  2. 1/4 கப் அரிசி
  3. 2 தேக்கரண்டி நெய்
  4. 1 கைப்பிடியளவு முந்திரி
  5. 5 தேக்கரண்டி பால்

1.முதலில் ஒரு கடாயை எடுத்து அதில் நெய்யை விட்டு நெய் சூடானதும் முந்திரி சேர்த்து வறுக்கவும். முந்திரி பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.

2.முந்திரி பொன்னிறமானதும் அதை கடாயில் இருந்து தனியாக எடுத்து வைத்துவிட்டு கடாயில் தயாராக வைத்துள்ள கரும்பு சாறை ஊற்றவும். பிறகு கரும்பு சாறை கொதிக்க விடவும். கரும்பு சாறு கொதிக்கும் போது அதனுடன் பாலை சேர்க்கவும்.

3.இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் பால் கரும்பு சாறு கலவையில் தயாராக வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். அரிசி மென்மையாக மாறும் வரை 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேலாக அரிசியை சமைக்கவும். அதன் பிறகு முழுமையாக வெந்ததும் அதில் உலர்ந்த பழங்களை சேர்த்து கிளறி கொள்ளவும்.

4.இப்போது இனிப்பான கரும்பு பாயாசம் தயார்.இதை சிறுவர்களுக்கு சிற்றுண்டியாக கொடுக்கலாம். உடலுக்கு அதிக குளுக்கோஸ் சக்தியை அளிக்கும் உணவாக இது இருப்பதால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உகந்தது அல்ல.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….