10 நிமிடத்தில் பிரெட்டை வைத்து ஈசியான ஸ்னாக்ஸ் செய்து விடலாம்!

நம் வீட்டில் செய்யக்கூடிய எளிய முறையில், மாலை நேரத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியவர்கள், வேளைக்கு சென்று வருபவர்கள், அனைவருகும் 10 நிமிடத்தில் வித்தியாசமாக ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் பிரெட் சில்லி செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருள்கள்:
பிரட் துண்டுகள் – 4
குடைமிளகாய் – பாதி
பட்டர் – 25 கிராம்
பூண்டு பற்கள் – 2
மிளகாய் தூள் – 1/2 மேஜைக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 மேஜைக்கரண்டி
தக்காளி சாஸ் – 1 மேஜைக்கரண்டி
உப்பு – சிறிது
கொத்தமல்லித்தழை – சிறிது
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1

செய்முறை:
1.வெங்காயத்தை நீள வாக்கிலும், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.பூண்டுப்பற்களை தட்டி வைத்துக்கொள்ளவும்.
2.அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் பிரெட்டை வைத்து சுற்றிலும் பட்டர் போட்டு பிறகு மறுபுறம் திருப்பி போட்டு சுற்றிலும் பட்டரை ஊற்றி பிரெட்டை டோஸ்ட் செய்யவும். எல்லா பிரெட்டையும் இதே போல் டோஸ்ட் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
3.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு அதோடு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
4.வெங்காயம் பொன்னிறமானதும் தட்டி வைத்துள்ள பூண்டுப்பற்கள், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
5.பிறகு அதனுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.
6.பிறகு அதனுடன் டோஸ்ட் செய்த பிரெட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….