பலாப்பழ ஊறுகாய் செய்வது எப்படி

முக்கனிகளில் ஒன்றான பலாவின் சுவையும், மணமும் யாருக்குத்தான் பிடிக்காது. அப்படிப்பட்ட பலாப்பழத்தில் சுவையான ஊறுகாய் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்

 பலாப்பழம் – அரை கிலோ, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கறுப்பு சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன், கடுகு – 2 டீஸ்பூன், வெந்தயம், பிளாக் சால்ட் – தலா ஒரு டீஸ்பூன், கடுகு எண்ணெய் – 125 கிராம், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

1.பலாப்பழத்தை துண்டுகளாக்கி வெயிலில் 2 மணி நேரம் காயவைத்துக் கொள்ளவும்.

2.மிளகாய்த்தூள், பிளாக் சால்ட், கடுகு, வெந்தயம், கறுப்பு சீரகம், மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, அத்துடன் பலாப்பழ துண்டுகள், உப்பு சேர்த்து பாட்டிலில் போடவும்.

3.கடுகு எண்ணெயைக் காயவைத்து, ஆறியதும் அந்தக் கலவையில் கொட்டி நன்கு குலுக்கினால் சுவையான பலாப்பழ ஊறுகாய் தயார். இதை பல நாட்கள் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.