கேரளா ஸ்டைல் தொவையல் செய்வது எப்படி!

நாளுக்கு நாள் நாம் உண்ணும் உணவை வித விதமாக சாய்த்து உண்ணவே பலரும் விரும்புகிறார்கள். அந்த வகையில் இந்த பதிவில் கேரளா ஸ்டைல் தேங்காய் துவையல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
வரமிளகாய் – 2
புளி – 1 துண்டு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின் அதில் புளி, பெருங்காயத் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்பு துருவிய தேங்காய் சேர்த்து ஈரப்பசை போகும் அளவில் பொன்னிறமாகுமாறு வறுத்து இறக்க வேண்டும். பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு, சிறிது நீர் ஊற்றி, கொரகொரவென்று அரைத்தால், தேங்காய் துவையல் தயார்.

குறிப்பு: வேண்டுமானால், வறுக்கும் போது ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்துக் கொள்ளலாம். துவையல் எப்போதும் சற்று கெட்டியாகவும், மென்மையாக இல்லாமல் கொரகொரவென்றும் தான் இருக்க வேண்டும். எனவே அதற்கேற்ப நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். விருப்பமுள்ளவர்கள், துவையலை தயார் செய்த பின்னர் கடுகை தாளித்து சேர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….