கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் 181 கோடியாக உயர்வு..!

இந்தியாவில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 181 கோடியாக அதிகரித்துள்ளது. இதனை தற்போது சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி செலுத்துவதே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 7 மணி வரை இந்தியாவில் தடுப்பூசி செலுத்தி அவர்களின் எண்ணிக்கை 181 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த சாதனையை படைக்க 2,14,38,677 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதனை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல 12 முதல் 14 வயது வரை உள்ளவர்களில் இதுவரை 34 லட்சம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதிலும் 1,581 பேர் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.