நான் கண்டிப்பாக விளையாடுவேன்…பாலியல் புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர் பேட்டி..!

அண்மையில் ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து டிம் பெயின் விலகினார். அவர் மீது கடந்த 2017 ஆம் ஆண்டு டிம் பெயின் மீது ஆஸ்திரேலிய அணியின் சக ஊழியர் பாலியல் குற்றச்சாட்டுப் புகாரினை முன்வைத்தார். அதன் காரணமாகவே தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து, அவர் அடுத்து மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் தொடர்ந்து விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் பெயின் அடுத்த மாதம் 8-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள ஆஷஸ் தொடரில் ஒரு வீரராக விளையாடுவேன் என தற்போது அறிவித்துள்ளார். மேலும், 2017 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து அவர் பேசியதாவது, இந்த சம்பவம் நடந்த அன்றைக்கே நான் கேப்டன் பதவியில் இருந்து விலகலாமா என்று யோசித்தேன் எனத் தெரிவித்துள்ளார். நான் உண்மையில் பதவி விலகலாமா,வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இத்தனை நாட்களாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஒரு வீரராக நான் விளையாடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகும் தான் போட்டியிலிருந்து ஒன்றும் ஓய்வுப் பெற போவதில்லை எனவும், தொடர்ந்து ஒரு வீரராக விளையாடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று ஆஷஸ் தொடரை வென்று அணியினை எப்போதும் சிறப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. அதற்காக ஒருன் வீரராக சிறப்பாக செயல்படுவேன் எனவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு முறையும் என் மீதான குற்றச்சாட்டு முடிந்துவிட்டது என்று நினைக்கையில் மீண்டும் மீண்டும் ஏதேனும் ஒரு வடிவில் அந்த சம்பவம் உருவெடுத்துக் கொண்டே இருக்கிறது. என்னால் ஆஸ்திரேலிய அணியின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக வேண்டாம் என நினைத்தேன் என்றார். அதுவும் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை நோக்கி செல்லும் இந்த தருணத்தில் என்னால் எந்த ஒரு குழப்பமும் வேண்டாம் என்றே இந்த முடிவினை நான் எடுத்துள்ளேன் என அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *