ஷாருக்கானை ஏலம் எடுக்கிறதா சிஎஸ்கே..?

நேற்று நடைபெற்ற சையது முஸ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தமிழக அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தமிழக அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் ஷாருக்கான் 15 பந்துகளில் அதிரடியாக 33 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் கடைப்பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷாருக்கான் சிக்சர் விளாசி அணியினை த்ரில் வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம் அனைவரின் கவனமுன் அவரின் பக்கம் திரும்பியுள்ளன.

இன்னும் ஓரிரு மாதங்களில் ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் தமிழக வீரர் ஷாருக்கானின் இந்த அதிரடியான ஆட்டம் அனைத்து ஐபிஎல் அணிகளின் கவனமும் அவரின் பக்கம் திரும்பியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் புதிதாக இரண்டு அணிகள் வரவுள்ளன. ஏற்கனவே உள்ள அணிகளுக்கு வீரர்களைத் தக்க வைக்கும் விதிமுறைகளையும் அண்மையில் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக 4 வீரர்களைத் தக்க வைக்க முடியும். தற்போது ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் ஷாருக்கான்.

நேற்று அவரினுடைய அதிரடியான ஆட்டத்தால் அனைத்து ஐபிஎல் அணிகளின் கவனமும் அவரின் மீது திரும்பியுள்ளது. அதிலும், குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஷாருக்கானை ஏலம் எடுக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மற்ற அணிகள் இருக்கும் போது சென்னை அணி அவரை ஏலம் எடுக்க உள்ளதாக கூறப்படுவதற்கு காரணம் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் கணக்கில் இருந்து நேற்று ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளது. இந்தப் புகைப்படத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முஸ்டாக் அலி இறுதிப் போட்டியில் தமிழக வீரர் ஷாருக்கான் விளையாடுவதைப் பார்ப்பது போல் உள்ளது. இதன்மூலம் சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் ஷாருக்கான் சென்னை அணிக்கு ஏலம் மூலம் எடுக்கப்படலாம் எனப் பேசப்பட்டு வருகிறது.

2022-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகிற ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக அணி வீரர் ஷாருக்கான் எந்த ஐபிஎல் அணியினால் ஏலம் எடுக்கப்படுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *