ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள இருக்கும் முக்கிய வீரர்கள்..!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் இந்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் புதிதாக இரண்டு அணிகள் களம் இறங்க உள்ளன. ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ள ஏற்கனவே வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏலம் தொடங்குவதற்கு சில நாட்களே இருப்பதால் அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் அணிகள் தங்களது அணிகளில் சில வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என பிசிசிஐ அறிவித்தது. இதன் மூலம் குறிப்பிட்ட சில வீரர்கள் தவிர அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமே எடுக்கப்படுவார்கள். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 590 வீரர்கள் ஏலத்தின் மூலம் எடுக்கப்பட உள்ளார்கள். அவர்களில் பல்வேறு நட்சத்திர வீரர்களும் அடங்குவர்.

ஐபிஎல் ஏலத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவன், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, இஷான் கிஷன், சுரேஷ் ரெய்னா, சஹல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் எடுக்கப்பட உள்ளனர்.

டேவிட் வார்னர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், பாட் கம்மின்ஸ், ஷிகர் தவன், டுப்லஸ்ஸிஸ், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி மற்றும் ககிசோ ரபடா ஆகியோருக்கு அடிப்படை விலை ரூபாய் 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சோப்ரா ஆர்ச்சர் அவருக்கும் அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர இந்தியாவின் பல்வேறு இளம் வீரர்களும் இந்த மெகா ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளனர். அதனால் மெகா ஏலத்திற்கான எதிர்பார்ப்பு ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…